News August 28, 2025

இரவில் சிறுத்தை உலா டிரோனில் கண்காணிப்பு!

image

ஊட்டியில் இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றது. இந்நிலையில் ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

ஆர்கே யானையை பிடிக்க உதவிய வாசிம், விஜய் கும்கிகள்!

image

நீலகிரி, கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 12 பேரைக் கொன்ற ‘ஆர்கே’ எனப்படும் ராதாகிருஷ்ணன் யானை, இன்று ஏழாவது நாள் தேடுதலுக்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை நெருங்க அச்சமிருந்ததால், முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான விஜய், வசிம் ஆகியவற்றின் உதவியுடன் காட்டு யானை வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.

News September 23, 2025

ஊட்டி அதிமுக கூட்டத்தில் 300 பேருக்கு பிரியாணி!

image

உதகை ஏடிசி பகுதியில் தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் எழுச்சி பயணம் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று பேசினார். இந்த கூட்டத்திற்கு உதகை நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஹக்கீம் பாபு தொண்டர்கள் 300 பேருக்கு மதியம் சிக்கன் பிரியாணி மற்றும் ஜூஸ் வழங்கி கூட்டத்தில் வழங்கினார்.

News September 23, 2025

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரப் பயணத்தின்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!