News March 26, 2026
இரவில் இந்த மாதிரி இருக்கா.. DANGER

உடலில் நச்சுகளை அகற்றுதல், நீர்ச்சத்து பராமரித்தல் உள்பட பல்வேறு வேலைகளை சிறுநீரகம் செய்கிறது. ஆனால், இன்றைய பணிச் சூழலால் பலருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, கால்களில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இரவில் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 7, 2026
ஸ்டாலினும் பாஜகவும் ரகசிய கூட்டணி: மம்தா பானர்ஜி

ஸ்டாலினுடன் பாஜக ரகசிய கூட்டணி உடன்பாடு வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளது தேசிய அளவில் விவாதமாக மாறியுள்ளது. மேற்கு வங்கத்தின் திறமையான அதிகாரிகள் TN-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இங்கு தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை பாஜக நியமித்துள்ளதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியில் முக்கிய தலைவர்களில் ஒருவரான மம்தாவின் இந்த பேச்சு ஸ்டாலினை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News April 7, 2026
பொதுமைக்கு விளக்கம் அளித்த சீமான்

இலவச திட்டங்கள் அறிவித்து ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றும் வேலையால் தமிழகத்துக்கு ₹10.5 லட்சம் கோடி கடன் உள்ளதாக சீமான் கூறியுள்ளார். புதுவையில் பேசிய அவர், அவரவர் வருவாய்க்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் பாகுபாடின்றி சமமாக நிதியை பிரித்து கொடுப்பதுதான் பொதுமை என்றார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்து தீர்த்த ஒரு பிரச்னையை கூறுங்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
News April 7, 2026
ராகுல் ஸ்டாலினுக்கு இடையே புகைச்சலா?

சீட் ஷேரிங் விவகாரத்தில் இருந்தே திமுக – காங்., இடையே ஒரு சைலண்ட் war நடப்பதாக பேசப்படுகிறது. அதற்கு தோதாக புதுவையில் ஸ்டாலினும் ராகுலும் காலை, மாலை என தனித்தனியே பிரசாரம் செய்திருக்கின்றனர். அத்துடன், TN-ல் பிரசாரம் செய்ய ராகுல் தேதி ஒதுக்கவில்லை எனவும் பேசப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே புகைச்சலா எனவும், இதனால் TN-ல் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்வார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.


