News March 28, 2025
இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில்

கிருஷ்ணகிரியில் புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள் பாலிக்கிறார்கள். மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 14, 2025
கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.