News October 23, 2024

இரண்டு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

image

திண்டுக்கல்- சிறுமலை புதூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்ததிண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

வெளிநாடு வேலைவாய்ப்பு மோசடி.. மக்களே உஷார்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலை என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என எச்சரித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் குறித்து புகார் அளிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அழைக்கலாம்!

News August 13, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பி இன்று (ஆக.13) இரவு 11 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

திண்டுக்கல்: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK NOW

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!