News December 15, 2025

இரண்டரை ரூபாய் நோட்டு பாத்திருக்கீங்களா?

image

கைகளில் காசையே அதிகளவில் பார்க்காத இன்றைய UPI ஜெனரேஷனை கண்டிப்பாக இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அவ்வளவு ஏன், எட்டணா, நாலணா போன்றவற்றை பயன்படுத்தியவர்களும் இதை கண்டிருக்க மாட்டார்கள். 1918-ல் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா) புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 8 வருடங்களிலேயே இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது. நீங்க நாலணா, எட்டணா யூஸ் பண்ணிருக்கீங்களா?

Similar News

News December 19, 2025

மீண்டும் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிச.16-ம் தேதி பேய்மழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டிச.25-ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேநேரம், இன்றும், நாளையும் அநேக இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிசம்பரில் பனிக்கும், மழைக்கும் தயாராகிக்கோங்க மக்களே!

News December 19, 2025

356-வது வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை

image

தேர்தல் நெருங்கும் நேரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட <<18609145>>நர்ஸ்களை<<>> கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகும் நேரத்திலும் நர்ஸ்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். கைது செய்த நர்ஸ்களை நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய்விட்டது அராஜகம் என்றும் அவர் கண்டித்துள்ளார்.

News December 19, 2025

24,000 பாக். பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி!

image

பிச்சையெடுப்பதை தொழிலாகவே மாற்றிய 24,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதேபோல, துபாயில் இருந்து 6,000 பேர், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாக்., பிச்சைக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காரணங்களை சுட்டிக்காட்டியே UAE-யும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

error: Content is protected !!