News December 13, 2025

இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

image

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அவர்களது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி X-ல் அவர், <<18551462>>TN 16% பொருளாதார வளர்ச்சி<<>> அடைந்ததாக மார்தட்டும் CM ஸ்டாலின், நிதி நெருக்கடி எனக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது இரட்டை வேடம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News December 14, 2025

தமிழகத்தில் SIR படிவ பதிவேற்றம் நிறைவு

image

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் SIR படிவங்களை நிரப்பி அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதனிடையே, நவ.4 முதல் பெறப்பட்ட SIR படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News December 14, 2025

BREAKING: பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்

image

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக் காலம் முடிந்தும் கட்சியின் தேசியத் தலைவராக JP நட்டா நீடித்துவரும் நிலையில், செயல் தலைவராக நிதின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஹார் மாநில அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

News December 14, 2025

இந்த ரோடு டிரிப்ஸ் சூப்பரா இருக்கும்.. டிரை பண்ணுங்க

image

ரோடு டிரிப் என்பது மனதிற்கு புத்துணர்வு தரும் அனுபவம். பயணத்தின்போது புதிய காட்சிகளை பார்க்க முடிகிறது, புதிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பயணம் செய்யும்போது மனதிற்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நம்மை நாமே புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது. அழகான ரோடு டிரிப் அனுபவத்தை தரும் சாலைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!