News February 15, 2025
இரட்டை படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
Similar News
News October 20, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல் காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

மயிலாடுதுறை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
மயிலாடுதுறையில் பாஜகவினர் பயிற்சி பயிலரங்கம்

மயிலாடுதுறை பாஜகவினர் நேற்று உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி பயிலரங்கத்தை நடத்தினர். இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மயிலாடுதுறை நகர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் மோடி கண்ணன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தீவிர உறுப்பினர்களை சேர்த்தனர்.