News January 23, 2026
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சர்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக களமிறங்கிய அவர், 219 பந்துகளில் 227 ரன்கள்(19fours, 9 sixes) குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன் மெஷினாக உள்ள சர்பராஸுக்கு மீண்டும் எப்போது சர்வதேச போட்டிகளில் இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 26, 2026
வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 உயர்வு!

<<18960694>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று(ஜன.26) வெள்ளி விலை 1 கிராம் ₹10 உயர்ந்து ₹375-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 7% உயர்ந்து ஒரு அவுன்ஸ்(28g) $108-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
ரேஸிங்கிற்கு பிரேக்: பைக் ரைடுக்கு கிளம்பிய AK!

கார், பைக் என இரண்டிலும் தீவிரம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித். சினிமாவிற்கு சின்ன கேப் விட்டு, கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் பைக் ரைடுக்கு புறப்பட்டு விட்டார். தற்போது துபாயில் உள்ள அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் & ஓமன் வழியாக பைக் ரைட் ஒன்றுக்கு கிளம்பியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் அஜித் பைக் ரைட் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்: PM மோடி

நமது இந்தியச் சமூகம் மலேசியாவிலும் கலாசாரம், பண்பாட்டை போற்றுகின்றனர் என PM மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளதாகவும், அவற்றில் தமிழ் பாடத்துடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பிராந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டார்.


