News March 15, 2025
இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
ஏப்.30ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துருக்களையும், ஆலோசனைகளையும் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.
News March 15, 2025
மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <