News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 10, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 10, 2025
தேனியில் மழை பெய்யும் – வானிலை மையம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
தேனி: IOB வங்கியில் வேலை இன்று முதல் APPLY பண்ணலாம்

தேனி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். <