News March 26, 2025
இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 11, 2025
கிருஷ்ணகிரி: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. 1. வகை: மத்திய அரசு 2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/- 3) கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech 4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38) 5. கடைசி தேதி: 14.11.2025 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 11, 2025
கிருஷ்ணகிரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரி, சூளகிரி, குருபரப்பள்ளி, போச்சம்பள்ளி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பணிகள் நாளை நடைபெறுகின்றன. இதனால், சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம் புளியம்பட்டி & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர்!
News November 11, 2025
கிருஷ்ணகிரி: கழிவறை தொட்டியில் விழுந்த குழந்தை பலி!

மத்தூர் அருகே உள்ள எம். ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் (22) மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு வசந்த் (2) என்கிற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வசந்த் பக்கத்து வீட்டு கழிவறை குழி திறந்து இருந்ததால் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


