News March 11, 2026
இப்படி விளக்கேற்றுங்கள்.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில், பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரித்து செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது.
Similar News
News March 30, 2026
BREAKING: இரவில் விஜய் புதிய அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலையொட்டி, விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று பெரம்பூரில் இருந்து தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அங்கு வரும் தவெகவினர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும், பிரசாரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
வெற்றியுடன் தொடங்குமா CSK?

IPL-ல், இன்று CSK-RR அணிகள் குவஹாத்தியில் மோதுகின்றன. அதிரடி வீரர்கள் சாம்சன், சர்பராஸ் கான், கார்த்திக் சர்மாவின் வருகையால் பேட்டிங்கில் வலுப்பெற்றுள்ள CSK, பவுலிங்கில் நூர் அகமது, ஹென்றி, கம்போஜை பெரிதும் நம்பியிருக்கிறது. பிரெவிஸ், தோனி இல்லாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், இளம் & அனுபவமிக்க வீரர்களை RR கொண்டுள்ளது. டெத் பவுலிங்கை பொறுத்தே CSK-வின் வெற்றி, தோல்வி அமையும்.
News March 30, 2026
குப்பைக்கும் வரி போட்ட திமுக அரசு: EPS

திமுக ஆட்சிக்கு வந்த பின், அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக EPS தெரிவித்துள்ளார். சொத்து வரி 100%, கடைகளுக்கான வரி 150%, மின் கட்டணம் 52% உயர்ந்துள்ளது என்றும், குப்பையை கூட விட்டு வைக்காமல் அதற்கும் திமுக அரசு வரி போட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக அரசுக்கு வருமானம் உயர்ந்த பின்பும், 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்றும் EPS விமர்சித்தார். <<-se>>#TNElection2026<<>>


