News March 11, 2026
இப்படி கூட கேஸ் மிச்சம் பண்ணலாம்

சமையலின் போது கேஸ் மிச்சப்படுத்துவதற்கான சில ட்ரிக்ஸ் *குக்கரில் முதல் விசில் அடித்தவுடன் தீயை மீடியம் பிளேமிற்கு மாற்றவும் *குக்கரில் 2-3 அடுக்குகள் பயன்படுத்தி ஒரே நேரத்தில் சாதம், பருப்பு, காய்கறிகளை வேக வைக்கலாம் *சிறிய பர்னரை உபயோகிக்கவும் *பிரிட்ஜில் இருந்த உணவுகளின் Chillness சற்று குறைந்த பிறகு சூடுபடுத்தவும் *கொண்டைக்கடலை, அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பிறகு சமைக்கவும்.
Similar News
News March 29, 2026
3 நாள்கள் விடுமுறை.. புதிய அறிவிப்பு வெளியானது

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாள்களை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகள், ஏப்.11, 25 ஆகிய 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் வழக்கம்போல் விடுமுறையாகும். இதை தவிர, ஏப்.1 வருடாந்தர கணக்கு முடிப்பு, ஏப்.3 புனித வெள்ளி காரணமாக வங்கிகள் செயல்படாது. அதேபோல், ஏப்.14 தமிழ் புத்தாண்டிற்கும் லீவுதான். இதனால், காசோலை டெபாசிட் உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT
News March 29, 2026
வாட்டும் வெயிலுக்கு நடுவில் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப். 4-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News March 29, 2026
திமுக கூட்டணியை விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் பதிலடி!

கிழிந்த துணியை தைத்து வைத்த மாதிரி திமுக கூட்டணி உள்ளது; அது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி என விஜய் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அன்பில் மகேஸ், வெறும் துணி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை; துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி என கூறியுள்ளார். திருச்சி திமுகவின் கோட்டை என்பதை வரும் தேர்தல் நிரூபிக்கும் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>


