News September 29, 2025
இப்படியும் செய்யலாமா? ஜிம்மாக மாறிய சர்ச்

நெதர்லாந்து நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சர்ச் ஒன்று புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது. 1924ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச், 2018ல் மூடப்பட்டது. அதன்பின்னர், 2021ம் ஆண்டில் நவீன 24 மணி நேர உடற்பயிற்சி மையமாக உருவெடுத்தது. பழமையான கட்டிடக்கலையுடன் உள்ள ஜிம் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 30, 2025
BREAKING: விஜய் வீடு திரும்பினார்

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அன்று இரவே சென்னை திரும்பினார் விஜய். கிட்டத்தட்ட 36 மணி நேரத்துக்கு பிறகு, இன்று காலை 11 மணியளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் சென்றார். அங்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நீலாங்கரை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
News September 30, 2025
‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்த படத்தில் சசிகுமார்

‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராஜேந்திரன், அடுத்ததாக சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் பிண்ணனியில் அமைக்கப்பட்ட இப்படத்தின் கதையில், சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக சசிகுமார் நடிப்பதாக தரணி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
News September 30, 2025
இந்திய வீரர்கள் கிரிக்கெட்டை அவமதித்தனர்: PAK கேப்டன்

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பொதுவெளியில் கைகொடுக்காமல் சென்றாலும், தனிப்பட்ட முறையில் 2 தடவை கைகொடுத்ததாக பாக்., கேப்டன் சல்மான் அலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளித்ததாகவும், இந்திய வீரர்கள் கிரிக்கெட் எனும் விளையாட்டை அவமதித்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஒரு நல்ல அணி இப்படி நடந்து கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.