News February 16, 2026
இபிஎஸ் வீட்டில் நயினார்.. இறுதியாகும் தொகுதி பங்கீடு

நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில், NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என நினைக்கிறீர்கள்?
Similar News
News February 17, 2026
AI-ல் அடுத்த 2 ஆண்டுகளில் ₹16.6 லட்சம் கோடி முதலீடு!

இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் AI மற்றும் டேட்டா கட்டமைப்பு தொடர்பான துறைகளில் சுமார் ₹16.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதில் ₹5.81 லட்சம் கோடி உறுதி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முதலீடுகளுக்கு நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு (டேட்டா நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி சலுகை) பெரும் ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டார்.
News February 17, 2026
புதிய கட்சியை தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்

OPS-ன் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பிப்.19-ல் ‘MGR அதிமுக’ என்ற புதுக்கட்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக, பாமகவில் பயணித்த அவர், ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின் தேமுதிகவில் இணைந்த அவர், 2011-ல் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தார். பின், மீண்டும் ஜெ., முன்னிலையில் 2014-ல் அதிமுகவில் இணைந்தாா்.
News February 17, 2026
பாத்ரூமில் நடிகை.. VIDEO எடுத்த நபர்..

பெங்களூருவில் நிகழ்ச்சிக்கு சென்ற இடத்திலிருந்த பாத்ரூமில் ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி தன்னை மிரட்டுவதாக கன்னட சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார். அந்த நபர், தனது இன்ஸ்டாவில் வீடியோவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். பொது இடங்களில் பயன்படுத்தப்படும் கழிப்பறைகளில் உஷாராக இருங்கள்.


