News January 11, 2026

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

image

தொழிலதிபர் லாட்டரி மார்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் திருவாடனை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனா தவெகவில் உள்ள நிலையில், அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் அண்மையில் புதுவையில் LJK என கட்சியைத் தொடங்கினார். அடுத்த அரசியல் நகர்வாக லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News February 2, 2026

சுற்றுலா மாநாட்டில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

image

மாமல்லபுரத்தில் 2 நாள்கள் நடைபெறும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரின் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாடு பல்வேறு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

தங்கம், வெள்ளி: எதில் முதலீடு செய்வது சிறந்தது

image

தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வதே அதிக லாபத்தை தரும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தங்கத்தில் ₹1 லட்சம், வெள்ளியில் ₹1 லட்சம் என முதலீடு செய்தால், 1 வருடம் கழித்து தங்கம் ₹1,15,000 ஆகவும், வெள்ளி ₹1,25,000 ஆகவும் இருக்கும் என விளக்கியுள்ளார். ஆபரணமாக மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் வெள்ளி தேவைப்படுவதால் அதன் மதிப்பு அதிகம் என அவர் கூறியுள்ளார்.

News February 2, 2026

இதற்காக தான் தவெக தொடங்கப்பட்டது: விஜய்

image

அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என கண்ணீர் வடித்து அதிமுகவை MGR தொடங்கினார் என விஜய் பேசியுள்ளார். அதேபோலதான் அண்ணா, MGR, காமராஜர் உட்கார்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள்(திமுக) இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடித்ததாக கூறிய அவர், அதற்காகவே தவெக தொடங்கப்பட்டது என கூறியுள்ளார். அப்போது MRG-ஐ விமர்சித்தவர்கள்தான், தற்போது தன்னையும் விமர்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!