News June 28, 2024

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Similar News

News October 18, 2025

கோவை: கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

image

கோவை துடியலூர் சேர்ந்தவர் உமா (41). இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (17.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

கோவை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

கோவையில் சமீப காலமாக பள்ளிக்கல்வித் துறை பெயரில், நிதி, பரிசு, வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும் என போலி செய்திகள் மூலம் நூதன மோசடி நடைபெற்று வருவதாகவும், இதை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு, கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையதளம்/கடிதம் மூலமே வந்தால் மட்டும் நம்ப வேண்டும், சந்தேகம் இருந்தால் 1930-க்கு புகார் செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

error: Content is protected !!