News December 31, 2024

 இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

image

“புத்தம் புது நம்பிக்கைகள் மலர தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்; தமிழக மக்கள் நிம்மதியாக வாழ ஏற்ற சூழலை ஏற்படுத்த ஒன்றுபட்டு நிற்போம்”- என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 5, 2025

சேலம்: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 5, 2025

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு 4,000 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அமைச்சர்!

image

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக இன்று செப்டம்பர் 5-ம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் “கற்பது மட்டும் போதாது, கேட்பதும்,கேள்வி கேட்பதும் தான் முன்னேற்றம்” என கற்றுத் தந்த நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!