News July 8, 2024

இபிஎஸ்-க்கு மக்களை சந்திக்க பயம்

image

எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை சந்திக்க பயம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். விக்கிரவண்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இபிஎஸ்-க்கு மக்களை பார்த்தும் பயம், பாஜகவை பார்த்தும் பயம். அதனால்தான் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிவண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என கடுமையாக சாடினார். பின்னர், திமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி அன்னியூர் சிவாவுக்கு வாக்கு சேகரித்தார்.

Similar News

News July 8, 2025

விழுப்புரத்தில் பழங்குடி இளைஞர்களுக்கு அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்ப மாதிரி விண்ணப்பம் மற்றும் மற்ற விபரங்கள் www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2025

News July 8, 2025

விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

News July 8, 2025

விழுப்புரம்-சென்னை கடற்கரை ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!