News January 19, 2026
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக’ என்றார்.
Similar News
News February 11, 2026
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 18ஆம் தேதி தாக்கல்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் பிப்ரவரி 18ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 11, 2026
சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிராவும், கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லியும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகரன் எம்.கே.பி.நகருக்கும், காளிராஜ் ஆர்.கே.நக ருக்கும், லதா மகேஸ்வரி ஐகோர்ட்டுக்கும், பாஸ்கர் கோட் டூர்புரத்துக்கு என 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
News February 11, 2026
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


