News November 4, 2025
இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ECI-யிடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் EPS தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல எனக் கூறியுள்ள அவர், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசமும் கோரியுள்ளார்.
Similar News
News November 4, 2025
சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. மாருதியை தொடர்ந்து ஹோண்டா, பண்டிகை சலுகைகளுடன் சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த மாடல் காருக்கு, அதிகபட்ச ஆஃபர் என்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க எந்த கார் வாங்க ப்ளான் பண்ணுறீங்க?
News November 4, 2025
செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை

1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், USA-ல் செய்யாத கொலைக்காக, இந்திய வம்சாவளி சுப்ரமணியம் வேதம் 43 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். நிரபராதி என தீர்ப்பு வந்தாலும், அவரை நாடு கடத்த USA அதிகாரிகள் மீண்டும் சிறைபிடித்தனர். சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரான சுப்ரமணியன் கோர்ட்டை நாட, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
News November 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.


