News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
Similar News
News January 21, 2026
பியூஷ் கோயலுடன் OPS மகன்.. அரசியலில் அடுத்த பரபரப்பு

சென்னையில் பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலை, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை NDA கூட்டணியில் TTV இணைந்த நிலையில், OPS என்ன நிலைபாடு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பியூஷ் கோயலுடன் ரவீந்திரநாத் சந்தித்துள்ளது அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் OPS தரப்பும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
NDA கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை

NDA கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றும், அதில் யார் சேர்ந்தாலும் மூழ்கடிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாள்களாக EPS-ஐ துரோகி எனக் கூறிவந்த TTV தினகரன் NDA-வில் இணைந்துள்ளார்; அக்கூட்டணி ஒரு இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி என்று அவர் சாடியுள்ளார்.
News January 21, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகள் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே இயங்காது. ஆனால், அடுத்த 10 நாள்களில் மட்டும் 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது, ஜன.26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாள்களில் தமிழகத்தில் மது விற்பனை கிடையாது. இவ்விரு நாள்களிலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


