News January 20, 2025

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News March 9, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை மீண்டும் தள்ளிவைப்பு!

image

பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டவாளத்தில் சில சிறிய அளவிலான சிவில் & எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

News March 9, 2026

சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

image

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து, நீங்கள் புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!