News January 6, 2025

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ 100.90க்கும், டீசல் 92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News February 7, 2026

சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

சென்னையில், மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 09.02.2026 அன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணியளவில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 7, 2026

சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

கொடுங்கையூர் மீனாம்பாள் சிவரான் தெருவில் வசிப்பவர் நசீமா பேகம். கணவரை பிரிந்து தனது மகன் பசுருல்லா (23) உடன் தனியாக வசித்து வந்தார். இவர், கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற பசுருல்லா, மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2026

சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று (பிப்.07) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி திருமுடிவாக்கம், காரம்பாக்கம், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்களத்தூர், முடிச்சூர், ஸ்டான்லி, விருகம்பாக்கம், மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. உங்க ஏரியா இருக்கிறதா என்பதை <>இங்கே<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!