News December 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 14, கார்த்திகை 28 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
Similar News
News March 2, 2026
தொகுதி பங்கீடு இழுபறி.. அமித்ஷாவை சந்தித்த EPS

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி பல நாள்கள் கடந்தும், இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து EPS உடன் பியூஷ் கோயல் மற்றும் நயினார் நாகேந்திரன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் அமித்ஷாவுடன் EPS ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
News March 2, 2026
சீமானுடன் இணைந்தார்.. முதல் ஆளாக ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், தமிழ் தேசியத்தை காக்க நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது என சீமான் வரவேற்றுள்ளார்.
News March 2, 2026
இஸ்ரேல் பக்கம் நிற்கும் மோடிக்கு நன்றி: நெதன்யாகு

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக PM மோடியுடன் நெதன்யாகு பேசியுள்ளார். தனது இனிய நண்பர் மோடியுடன் பேசியதாகவும், எங்கள் பக்கம் நிற்கும் அவருக்கு நன்றி எனவும் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த மாதம் 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற PM மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


