News December 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 11, கார்த்திகை 25 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
Similar News
News December 11, 2025
தாய்லாந்தில் கோவா நைட் கிளப் உரிமையாளர்கள் கைது

<<18492944>>கோவா நைட் கிளப் தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த வழக்கில், அதன் உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌரவ் லுத்ரா மற்றும் சௌரப் லுத்ரா என்ற அந்த சகோதரர்கள் விபத்து நடத்த உடன் தாய்லாந்திற்கு தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் விசாரணையில் விதிமீறலே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததால், தாய்லாந்து போலீஸ் உதவியுடன் இருவரையும் பிடித்துள்ளனர். இன்று மாலை இருவரும் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
News December 11, 2025
சற்றுமுன் EPS-ஐ சந்தித்தார் நயினார் நாகேந்திரன்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் EPS-ஐ சந்தித்து நயினார் பேசி வருகிறார். வரும் 14-ம் தேதி அவர் டெல்லி செல்லவிருக்கும் நிலையில், EPS உடனான ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி முடிவுகளை எடுக்க EPS-க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
News December 11, 2025
காற்று மாசை காலிசெய்யும் Go Green Filter: யூத்ஸின் ஐடியா!

உலகின் கொடிய வில்லனாக காற்று மாசு மாறியுள்ளது. இதில் பெரிய பங்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைக்குதான். இந்த புகையை ஆக்ஸிஜனாக மாற்றலாமா என யோசித்த USA-வை சேர்ந்த ரோஹன் கபூர் & ஜாக் ரீச்செர்ட் இன்று உலகின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்கள் உருவாக்கிய ‘Go Green Filter’ வாகனங்களின் புகையை 74% குறைக்கிறதாம். இது இந்தோனேஷியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நம் ஊருக்கும் தேவை அல்லவா?


