News June 18, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*மணிப்பூரில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமித் ஷா
*அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது – ஜெயக்குமார்
*T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு வங்கதேச அணி தகுதி பெற்றது.
*பால் வளத்துறையில் 916 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்து தமிழக அரசு சாதனை
*சீன எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை 48% ஆக உயர்த்த ஐரோப்பிய யூனியன் முடிவு
Similar News
News September 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 14, 2025
பவன் செஹ்ராவத்தை நீக்கிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத்தை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் X தள பதிவில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அணியின் நடத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப, தேவையான பரிசீலனைக்கு பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அவருக்கு பதில் அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக செயல்படவுள்ளார்.
News September 14, 2025
நிலைபாட்டை மாற்றிய இந்தியா

அணிசேரா நாடுகளின் தலைவனாக இந்தியா திகழ்ந்த காலத்தில், பாலஸ்தீன சுதந்திரத்துக்கு தீவிர ஆதரவளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுடன் நெருக்கமான நிலையில், ஐநாவில் பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானம் வரும்போது வாக்கெடுப்புகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தது. ஆனால், நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இந்தியா பழைய நிலைப்பாட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.