News May 3, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: ஜெயக்குமார்
▶பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை: ப.சிதம்பரம்
▶தமிழ்நாட்டில் பாஜக தலைமையை மாற்ற வேண்டும்: சுப்பிரமணிய சாமி
▶இளநிலை மருத்துவப் படிப்புக்கான NEET தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியானது.
▶பாஜக வளரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்: கே.எஸ்.அழகிரி
▶கோடை வெயிலால் பீர் விற்பனை அதிகரிப்பு

Similar News

News September 21, 2025

‘நியோ மிடில் கிளாஸ்’ எழுச்சி!

image

25 கோடி பேர் வறுமையை வென்றதாக கூறிய PM மோடி, அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ₹12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

News September 21, 2025

வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

image

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.

News September 21, 2025

இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

image

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.

error: Content is protected !!