News January 4, 2026
இன்றே கடைசி.. SIR லிஸ்ட்டில் பெயர் இல்லையா

SIR லிஸ்ட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள், தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆன்லைனில் அல்லது BLO-வை நேரில் சந்தித்து உங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். <<18628448>>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாட்டில் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றே கடைசி நாள் என்பதால், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 6, 2026
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மி. அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது 150 மி. சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
News January 6, 2026
SPORTS 360°: குஜராத்தை வீழ்த்திய தமிழ்நாடு அணி

கடைசி ஆஷஸ் தொடரின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 166/2 ரன்கள் சேர்த்திருந்தது. *தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி ஜம்மு காஷ்மீரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது. தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை தமிழ்நாடு ஆடவர் அணி வீழ்த்தியது.
News January 6, 2026
அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம்: CPM

கூட்டணி ஆட்சியா? தனித்த ஆட்சியா? என்ற பிரச்னைக்கு, அதிமுகவும், பாஜகவும் முதலில் முடிவு காணவேண்டும் என CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என பேசும் அதேசமயம், EPS தனித்த ஆட்சி என பேசி வருவதாக விமர்சித்துள்ளார். அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றும் பாஜக, தைரியமாக கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


