News December 6, 2025
இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.
Similar News
News April 13, 2026
கேபிள் சேனலில் ’ஜன நாயகன்’… அதிர்ச்சி

இணையத்தில் லீக்கான ’ஜன நாயகன்’ படம் கோவையில் லோக்கல் கேபிள் டிவி ஒன்றில் ஒளிபரப்பானது தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.11-ம் தேதி ‘ராசி பிரைம் மூவி’ என்ற லோக்கல் கேபிள் சேனலில், HD தரத்தில் படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதுகுறித்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில், கேபிள் ஆபரேட்டர் பழனிசாமி மீது FIR பதிவுசெய்த போலீசார், 4 ஹார்ட் டிஸ்க் & ஒரு கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.
News April 13, 2026
RR அணி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய BCCI

RCB-க்கு எதிரான போட்டியில் டக்-அவுட்டில் (dugout) செல்போன் பயன்படுத்திய RR அணி மேனேஜர் ரோமி பிந்தருக்கு BCCI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. BCCI-ன் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு, 48 மணி நேரத்திற்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. IPL விதிமுறைகளின்படி, டக்-அவுட்டில் அணி வீரர்கள், ஊழியர்கள் உள்பட யாருக்கும் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.
News April 13, 2026
IPL: ஹைதராபாத் பேட்டிங்

RR-க்கு எதிரான போட்டியில் SRH முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இதுவரை தோல்வியே தழுவாமல் வீறுநடை போடும் RR, 5-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. மோசமான பவுலிங்கால் தத்தளிக்கும் SRH வெற்றி பாதைக்கு திரும்ப போராடும். இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இன்றும் 220+ ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான உப்பல் மைதானத்தில் திறம்பட பந்துவீசும் அணியே வெற்றிபெறும்.


