News January 1, 2026
இன்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.
Similar News
News February 5, 2026
மேலூர் அருகே லாரி, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

சிவகங்கை நாட்டரசன் கோட்டை கண்ணன்(54) பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபியுடன்
காரில் இன்று அதிகாலை 2 மணிக்கு மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்றனர். தெற்குபட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது பூக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டி, சாகுல், மணி, குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
மதுரையில் பரபரப்பு…..12 வயது சிறுவன் தற்கொலை.!

கொட்டாம்பட்டி அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் லிங்கேஸ்வரன்(12). வீட்டில் உள்ள சைக்கிளை ஓட்டுவதில் அவரது இளைய சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதைப் பெற்றோர் கண்டித்தனர். இதில் கோபம் அடைந்த லிங்கேஸ்வரன் வீட்டில், நைலான் கயிறு எடுத்து தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
மதுரை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <


