News January 31, 2025
இன்று முதல் புத்தகப்பிரியர்களுக்கு 10 நாள் கொண்டாட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தகத் திருவிழா இன்று மாநகராட்சி வர்த்தக மைய வளாகத்தில் தொடங்குகிறது. வருகிற ஒன்பதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாள் இந்த விழா நடைபெற உள்ளது. 120க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கின்றனர்.
Similar News
News August 22, 2025
நெல்லை: ரூ.1,31,500 சம்பளத்தில் வேலை APPLY NOW

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <
News August 22, 2025
நெல்லையப்பர் ஆவணி மூலத் திருவிழா தொடக்கம்

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.
News August 22, 2025
பள்ளிக்கு கத்தியை கொண்டு சென்ற மாணவரால் பரபரப்பு

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.