News January 1, 2026

இன்று முதல் கார்களின் விலை உயர்கிறது

image

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரியை குறைத்ததால், பைக், கார்களின் விலையும் சரிந்தது. இதன் காரணமாக, வாகன பிரியர்கள் புதிய வாகனங்களை ஆர்வமுடன் வாங்கினர். இந்த நிலையில், உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி, Honda, Hyundai, Renault, Nissan, BYF, BMW உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை உயர்த்துகின்றன.

Similar News

News January 1, 2026

மயிலாடுதுறை: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

மயிலாடுதுறையில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. மயிலாடுதுறை பெண் காவலர் நாகையில் தற்கொலை
2. வைரமுத்து இளைஞர் ஆணவப் படுகொலை
3. மயிலாடுதுறை டிஎஸ்பி கார் பரிக்கப்பட்ட விவகாரம்
4. த.வா.க பிரமுகர் படுகொலை
5. டிட்வா புயலால் மழை வெள்ளம்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!

News January 1, 2026

குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

image

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.

News January 1, 2026

மகளிர் உரிமைத் தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ₹1,000 பெற்று வந்தால் புகாரளிக்க <>https://kmut.tn.gov.in<<>> தளத்தில் ஆப்ஷன் இருந்தது. தற்போது, அதனை அரசு நீக்கியுள்ளது. அதனால், ஆன்லைனில் புகார் தெரிவிக்க முடியாது. அதேநேரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!