News January 2, 2026
இன்று முதல் இலவச தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜன.2) முதல் ஜன.8-ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
Similar News
News January 26, 2026
FLASH: நாளை வங்கிகள் விடுமுறை

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாளை நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
News January 26, 2026
குடியரசு தினவிழாவில் கவர்னர், CM ஸ்டாலின் மரியாதை!

நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் கவர்னர் RN ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கவர்னர் RN ரவி, பாரதிதாசனின் சங்கே முழங்கு கவிதையை போற்றும் வகையில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ரசித்தார். இவ்விழாவில் CM ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
News January 26, 2026
சீனா US-க்கு அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதா?

சீனாவின் அணு ஆயுதங்கள் குறித்த தொழில்நுட்பத் தரவுகளை, அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் ஜாங் யூக்ஸியா US-க்கு கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் வாங்கிக்கொண்டு தனது அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட ஜாங் யூக்ஸியா மீதான இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.


