News January 18, 2026
இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
Similar News
News February 3, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்!

*எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது *நல்லவன் படகில் போகும் போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கினால், நதியேத் திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான்.
News February 3, 2026
அரிதிலும் அரிது.. நீங்கள் காணாத உலக அதிசயம்

வெவ்வேறு விளையாட்டுகளின் உலகக் கோப்பை தொடர்களில் ஆடிய 3-வது நபர் என்ற பெருமையை இத்தாலியின் வெய்ன் மேட்சன் பெற்றுள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்க அணிக்காக ஹாக்கி உலகக் கோப்பையில் ஆடிய இவர், தற்போது டி20 WC-ல் இத்தாலியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதற்கு முன்பாக ரூடி வான் ( ரக்பி + கிரிக்கெட் ) மற்றும் எல்லிஸ் பெர்ரி ( கால்பந்து + கிரிக்கெட் ) உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கின்றனர்.
News February 3, 2026
திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிப்பு: பாஜக

திமுகவின் ஆட்சியில் TN-ல் ரவுடியிசமும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், தேனி மற்றும் ஓசூரில் பட்டப்பகலில் நடந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


