News November 3, 2025
இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் காலை 10.30 மணிக்கு மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள். அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
Similar News
News November 3, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


