News November 11, 2024

இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சாலை வசதி, மின்விளக்கு வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்களிடம் இருந்து 470 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 19 மனுக்கள் என 489 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 10, 2025

குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் மாதாந்திர ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025) நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்

News September 10, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் பொதுப்பணி துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்

error: Content is protected !!