News March 8, 2026

இன்று பைனல்.. உச்சம் தொட்ட கட்டணம்!

image

பெரிதும் எதிர்பார்க்கப்படும் WC T20I இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், ஹோட்டல் ரூம் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு ₹18 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். அதே போல முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Similar News

News March 29, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்

image

அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி K.மோகன் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். அந்தப் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் முக்கூர் N.சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இன்று காலை தவெகவில் இணைந்த தூசி மோகன், செய்யாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2026

ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.. நேற்று DMK, ADMK.. இன்று TVK

image

பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய MGR அண்ணா திமுகவில் இருந்து நேற்று விலகிய ரஞ்சித்குமார், தவெக காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சீட் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அதிமுக திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் டாக்டர் திருப்பதியை திருப்பத்தூர் வேட்பாளராகவும், திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த ஆர்.எஸ் முருகனை நெல்லை வேட்பாளராகவும் விஜய் அறிவித்துள்ளார்.TNElection2026

News March 29, 2026

மதியம் அசைவம் சாப்பிட்டதும் தூங்கலாமா?

image

சிக்கன், மட்டன், மீன் என மதியம் நன்றாக சாப்பிட்டதும் தூக்கம் சொக்கும். ஆனால், உடனே தூங்கிவிட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அசைவம் கடினமான உணவு என்பதால், ஜீரணமாக நேரமாகும். எனவே, சாப்பிட்ட 30-45 நிமிடங்கள் கழித்து தூங்க வேண்டும். அதேபோல், குட்டி தூக்கம் மட்டுமே போட வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்கள் தூங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!