News November 7, 2025

இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

image

மார்பக, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களுக்கு இந்த பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவ. 7-ம் தேதி இந்திய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த நாளில், விழிப்புணர்வு மட்டுமின்றி, புற்றுநோயை எதிர்கொள்ளும் சமூக மனப்பாங்கை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

Similar News

News February 14, 2026

விஜயகாந்த் Vs விஜய்.. கூட்டம் ஓட்டாக மாறுமா?

image

நடிகர்களுக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என திமுக, அதிமுக, பாஜக என விஜய்க்கு எதிரணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். விஜய்யை விட பெரிய நடிகரான விஜயகாந்த் 2005-ல் கட்சி ஆரம்பித்து 2006 தேர்தலில் களம் கண்டார். ஆனால், அவரைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அதனை நினைவுகூர்ந்த நயினார், விஜய்க்கு அந்த வெற்றி கூட கிடைக்காது எனக் கூறியுள்ளார். உங்கள் கருத்து?

News February 14, 2026

சினிமாவில் இருந்து அரசியலை பிரிக்கவே முடியாதா?

image

தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. இது சர்வதேச சினிமாவுக்கும் பொருந்தும் என எழுத்தாளர் அருந்ததி ராய் நிரூபித்துள்ளார். இஸ்ரேல் – காசா போர் குறித்த கேள்விக்கு, அரசியலில் இருந்து சினிமா விலகி இருக்க வேண்டும் என பெர்லின் சர்வதேச திரைப்பட நடுவர் மன்றம் பதிலளித்தது. இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்ததாக கூறிய அருந்ததி ராய், அதில் தான் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

News February 14, 2026

மகளிருக்கு ₹10,000 கொடுக்க வேண்டும்: லயோலா மணி

image

மகளிருக்கு அரசு வழங்கிய ₹5,000 போதாது இன்னும் ₹5,000 சேர்த்து கொடுக்க வேண்டும் என தவெகவின் லயோலா மணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தோல்வி பயத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சாடியதுடன் ஏழை மக்களுக்கு இந்த பணம் செல்வதால் நல்லதுதான் என்றார். அதேநேரம், எவ்வளவு பணம் கொடுத்தாலும் தீயசக்தி திமுகவுக்கு பதிலாக, தூயசக்தி தவெகவை மக்கள் தேர்வு செய்வார்கள் எனக் கூறினார். உங்கள் கருத்து?

error: Content is protected !!