News March 18, 2025
இன்று புறப்படும் குமரி – மும்பை ரயில் 2.30 மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி – மும்பை CST சிறப்பு ரயில்(எண் 01006) இன்று(மார்ச் 18) பிற்பகல 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டியிருந்தது. இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தால் 2 மணி 30 நிமிடம் தாமதம், மாலை 16.45 மணிக்கு CST சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
Similar News
News March 19, 2025
நியாய விலை கடைகளில் சரியான அளவில் பொருட்கள் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எந்த ஒரு புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் சரியான அளவில் பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறியுள்ளார்.
News March 18, 2025
குமரியில் திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோயில்

குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS
News March 18, 2025
நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

குமரி – கேரள எல்லை பகுதியான பழுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள – தமிழக போலீசார் விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நிதி நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கை கேரள அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.