News March 25, 2026
இன்று பிரசாரத்தை தொடங்கும் EPS

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை EPS மயிலாப்பூரில் தொடங்குகிறார். அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்காக ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். சென்னையைத் தொடர்ந்து நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
Similar News
News March 30, 2026
கூடலூர்: அரசு ஊழியர் மீது அதிரடி நடவடிக்கை!

கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் நெடுஞ்செழியன். இவர், அரசு பணியில் இருக்கும் போது அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என்ற விதிமுறையை மீறி திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து நெடுஞ்செழியனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
News March 30, 2026
பிரசாரத்தில் அஜித் போட்டோவுடன் EPS

கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து EPS தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், EPS-அஜித் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோவை அவருக்கு பரிசளித்தனர். அதை EPS மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியில் உயர்த்தியும் காண்பித்தார். அதில், ‘Never Ever Give Up’ என்ற அஜித் பட வசனமும் இடம்பெற்றிருந்தது. <<-se>>#TNElection2026<<>>