News January 29, 2026

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று(ஜன.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7 (சனிக்கிழமை) வேலை நாளாகும்.

Similar News

News February 9, 2026

திமுக – காங்., பேச்சுவார்த்தை எப்போது? கார்த்தி சிதம்பரம்

image

கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளால் திமுக – காங்., கூட்டணி பேச்சுவார்த்தை சிக்கலில் உள்ளது. இந்நிலையில், சிறு சிறு எதிர்பார்ப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தையின் போது சரிசெய்யப்படும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தயாராகவே உள்ளதாகவும், ஆனால் திமுகதான் இதுவரை குழுவை அமைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

News February 9, 2026

14 பேருடன் திருமணம்.. நடிகை நிகிலா விமல் ரியாக்‌ஷன்

image

‘பென்னு கேஸ்’ என்ற மலையாள படத்தில் பணத்திற்காக 14 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபடும் கேரக்டரில் நிகிலா விமல் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் குறித்து பேசிய அவர், ஒவ்வொரு திருமண காட்சிக்கும் மேக்கப் போட்டது பெரும் சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். இனி நிஜமாக திருமணம் நடந்தால்கூட தனக்கு உற்சாகமா இருக்குமா என தெரியவில்லை என்று நிகிலா வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

T20 WC: இலங்கையிடம் போராடி அயர்லாந்து தோல்வி

image

டி20 உலகக்கோப்பையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் குஷல் மெண்டிஸ்(56), கமிந்து மெண்டிஸ்(44) சிறப்பாக விளையாட 163/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்தில் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்காததால் 143 ரன்கள் ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் தீக்‌ஷனா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

error: Content is protected !!