News January 28, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!

தொடர் விடுமுறைக்கு பின் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். இந்நிலையில், இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
நடிகை சம்யுக்தா ஹனிமூன் போட்டோஸ்

நடிகை சம்யுக்தா தனது கணவருடன் ஹனிமூன் சென்ற போட்டோஸை SM-ல் பகிர்ந்துள்ளார். CSK முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த்தும் பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தாவும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இது, இவர்கள் இருவருக்கும் 2-வது திருமணம். திருமணம் முடிந்த கையுடன் ஹனிமூன் சென்றுள்ளனர். ஹனிமூன் போட்டோஸை சம்யுக்தா தற்போது பதிவிட்டுள்ளார்.
News February 8, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இன்னும் பாகிஸ்தான் மீளவில்லை

கடந்தாண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல் நடந்து 10 மாதங்கள் கடந்த பிறகும் இதிலிருந்து பாகிஸ்தான் இன்னும் முழுமையாக மீளவில்லை. தாக்குதலுக்கு உள்ளான போலாரி விமானத் தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை NDTV வெளியிட்டுள்ளது.
News February 8, 2026
பெண்கள் அதிகம் விரும்பும் 9 சேலைகள்!

சேலை வெறுமனே உடை மட்டும் அல்ல; அது, இந்திய பாரம்பரியத்தின் சின்னம். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான நெசவுத்திறன், டிசைன்களில் சேலைகள் உருவாக்கப்படுகின்றன. அவை அந்த மண்ணின் பண்பாட்டை, கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்திய பாரம்பரியத்திற்கு அழகு சேர்க்கும் சேலை வகைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த சேலை எது?


