News September 6, 2025
இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், இன்று (செப்.6) நடைபெற உள்ளது. மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, மருத்துவக் குழுக்களிடம் பரிசோதனை செய்துகொண்டு, முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News March 9, 2026
விழுப்புரம் ஆட்சியர் இளைஞர்களுக்கு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பின்படி, தாட்கோ (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு மற்றும் கேபின் குழு பணிகளுக்கான 3 மாத இலவச பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத தகுதியுள்ள நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News March 9, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
விழுப்புரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


