News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இன்று பெயர்ச்சி அடைந்த சனி பகவான் மார்ச் 13-ல் அஸ்தமனம் ஆகிறார். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்குமாம். *மேஷம்: நிதி நிலைமை மேம்படும். உடல்நலப் பிரச்னை குறையும். *விருச்சிகம்: வேலை, தொழிலில் முன்னேற்றம். கடன் சுமை அகலும். *கும்பம்: சொத்து விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
Similar News
News March 30, 2026
ஸ்டார் தொகுதி வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

அதிமுக, திமுகவை தொடர்ந்து அபுமமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, நாங்குநேரி – வெள்ளத்துரை, திண்டுக்கல்-ராமு, திருச்சி கிழக்கு – நந்தகுமார், மன்னார்குடி-ராசுப்பிள்ளை, திருமங்கலம்-ஜீவதா நாச்சியார், மயிலாடுதுறை – சுதாகர், மதுரை மத்தி-சக்கரவர்த்தி, சங்கரன்கோவில்-வசந்தி, திருப்பரங்குன்றம் – தனபாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
வேட்பாளர்கள் அறிவிப்பில் இதை கவனிச்சீங்களா?

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக, தவெகவின் அறிவிப்பு SM-ல் வைரலாகிறது. 3 கட்டங்களாக வெளியிடப்பட்ட அதிமுகவின் பட்டியலில் EPS-ன் பெயர் முதலிடத்திலிருந்தது. திமுகவின் பட்டியலில் ஸ்டாலினின் பெயர் கடைசி இடத்தில் இருந்தது. தவெகவின் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றிருந்ததை நீங்க கவனிச்சீங்களா? <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
காதலியை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்

விசாகப்பட்டினத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. ரவீந்தர்(35) என்பவர் காதலி மோனிகாவை(29) துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். ரவீந்தருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், மனைவி ஊருக்கு சென்ற போது, காதலியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். திடீரென ஏற்பட்ட சண்டையால், கோபத்தில் இப்படி செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். காணாமல் போன பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.


