News April 3, 2026

‘இன்று சஞ்சு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார்..’

image

சேப்பாக்கத்தில் நடைபெறும் PBKS-க்கு எதிரான மேட்ச்சில், சஞ்சு அதிரடியான இன்னிங்ஸை விளையாடுவார் என Ex வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். முதல் 4, 5 பந்துகளை எதிர்கொண்ட பிறகு சஞ்சு விஸ்வரூபத்தை காட்டுவார் எனவும் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். PBKS-க்கு எதிரான இன்றைய போட்டியில் சஞ்சு அடித்து நொறுக்குவார் எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார். முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு இன்று அதிரடி காட்டுவாரா?

Similar News

News April 13, 2026

த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிப்பு

image

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவின் வீட்டில் காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. நேற்று ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 13, 2026

BREAKING: 2029-க்குள் மகளிர் இடஒதுக்கீடு.. PM மோடி உறுதி

image

மகளிர் இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று என PM மோடி கூறியுள்ளார். டெல்லியில் மகளிர் சக்தி சம்மேளனத்தில் பேசிய அவர், இம்மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் ஏப்.16 முதல் விவாதிக்கப்படும் எனவும், எப்படியாவது 2029-க்குள் இது அமலுக்கு வரவேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசியலில் ஆழமான சிந்தனை உடைய பெண்களின் கனவுகளுக்கு இந்த சட்டம் சிறகுகள் முளைக்கும் எனவும் பேசியுள்ளார்.

News April 13, 2026

செல்லூர் ராஜுவின் காமெடிக்கு அளவில்லை: மாணிக்கம் தாகூர்

image

முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலை என செல்லூர் ராஜு புகழ்ந்திருந்தார். இந்நிலையில், இதனை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர், செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவில்லாமல் போய்விட்டதாக X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், தேவர் அய்யாவை அவமதிக்கும் அவரது பேச்சுக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!