News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News July 9, 2025
கிருஷ்ணராயபுரத்தில் போதை ஊசி கும்பல் சிக்கியது

கிருஷ்ணராயபுரம் அருகே தென்கரை வாய்க்கால் பகுதியில் 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), ராயனூரை சேர்ந்த ஹரிஹரன் (22), திருமாநிலையூரை சேர்ந்த நித்திஷ் (22), மணவாடியை சேர்ந்த சித்தி குமரன் (19) என்பதும் போதை ஊசி செலுத்தி போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 9, 2025
குளித்தலை: நீதிமன்றம் எதிரே திட்டிய நபர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 8, 2025
சிந்தலவாடி யோக நரசிம்ம சுவாமி கோயில்!

கரூர், கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடியில் புகழ்பெற்ற யோக நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.