News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

கடலூர் மாவட்டம், வில்வராயநத்தத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோயிலில் வில்வநாதீஸ்வரர், திரிபுர சுந்தரி தாயாருடன் அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News April 26, 2025
லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்

விருத்தாச்சலம் பகுதியில் அண்மையில் போக்சோ வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி இருவரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
News April 25, 2025
கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <