News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

நாமக்கல்: மோகனூரில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் திருக்கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News July 9, 2025
நாமக்கல்: சாலை விபத்தில் முதியவர் பலி

நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்துவேல்(70) எனும் தறிப்பட்டறை தொழிலாளி வட்டமலை அருகே தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன், மகளைப் பார்க்க நேற்று முன் தினம் மதியம் சென்று விட்டு திரும்பிய போது சேலம் – கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியக வந்த கார் முத்துவேல் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News July 9, 2025
நாமக்கல்லில் 238 சிறப்பு முகாம்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் இம்முகாம் தொடர்ந்து செப்டம்பர் 30ந் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் துர்க்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல்லில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.