News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News July 9, 2025
UPSC மதிப்பீட்டுத் தேர்வு: ரூ.7,500 ஊக்கத்தொகை

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7.500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. மதிப்பீட்டு தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சேர விரும்பும் நபர்கள் <
News July 9, 2025
UPSC மதிப்பீட்டுத் தேர்வு: ரூ.7,500 ஊக்கத்தொகை (2/2)

▶️ யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ▶️ குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். ▶️ ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ▶️ ஹால் டிக்கெட் ஜூலை.3-வது வாரம் வெளியிடப்படும். ▶️ தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும். ▶️ மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு தேர்வு நடைபெறும்.
News July 9, 2025
கோவை: பிக் பாக்கெட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முந்தினம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின், பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அவரை வரவேற்க காத்திருந்த 4 பேரிடம் ரூ.2.07 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பிக் பாக்கெட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று ராஜி, ராஜா@குண்டு ராஜன், சுரேஷ், ரமேஷ், கோபால், அருள்குமார் ஆகியோரை கைது செய்தனர்.